/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அலட்சியத்தால் அவதி ரோடுகளில் தேங்கும் மழை நீரால் விபத்துக்கள் கழிவு நீரும் கலப்பதால் பெரும் சுகாதாரக் கேடு
/
அலட்சியத்தால் அவதி ரோடுகளில் தேங்கும் மழை நீரால் விபத்துக்கள் கழிவு நீரும் கலப்பதால் பெரும் சுகாதாரக் கேடு
அலட்சியத்தால் அவதி ரோடுகளில் தேங்கும் மழை நீரால் விபத்துக்கள் கழிவு நீரும் கலப்பதால் பெரும் சுகாதாரக் கேடு
அலட்சியத்தால் அவதி ரோடுகளில் தேங்கும் மழை நீரால் விபத்துக்கள் கழிவு நீரும் கலப்பதால் பெரும் சுகாதாரக் கேடு
ADDED : நவ 25, 2025 04:08 AM

நத்தம்,:திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழை பெய்யும் நிலையில் ரோடுகளில் மழைநீர் வடிகால் இல்லாததாலும், ரோடு பள்ளங்களை முன்னெச்சரிக்கையாக சீரமைக்காததால் ஆங்காங்கே மழைநீருடன் கழிவு நீரும் கலந்து பெரும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இதோடு டூவீலர்களில் வருபவர்கள் பாதிப்பதுடன் விபத்து அபாயமும் உருவாகிறது.
மாவட்டத்தில் பருவ மழை பெய்து வருவதால் கிராமம், நகர் ரோடுகள் முதல் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் பெரும்பாலான ரோடுகளில் மழை நீர் தேங்கி குளம் போல் நிற்கிறது. இந்த மழை நீருடன் கழிவுநீரும் கலந்து சுகாதாரக் கேடை ஏற்படுத்துகிறது. தரமற்ற ரோடு பணிகளால் குறுகிய நாளிலே பெரும் பள்ளங்கள் உருவாக அதை சீரமைப்பதில் கவனம் செலுத்தாததால் இந்நிலை தொடர்கிறது. மழை நீர் வடிகாலை முறையாக அமைத்திருந்தால் இந்நிலையை தவிர்த்திருக்கலாம். வாகனங்களில் செல்பவர்கள் தண்ணீர் தேங்கி நிக்கும் சாலைகளில் செல்லும் போது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதால் டூவீலர்கள் ஆட்டோக்களில் வருபவர்கள் பாதிக்கின்றனர்.வேகமாக வரும் சிறிய ரக வாகனங்கள் தண்ணீருக்குள் சிக்கி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கள் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது.ரோடு பள்ளங்களில் தேங்கி உள்ள தண்ணீரை அகற்றி பள்ளங்களை சீரமைக்க உள்ளாட்சி ,நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவை சீரமைப்பு
நத்தம் திண்டுக்கல் நெடுஞ்சாலை புதிதாக அமைக்கப்பட்டு பணிகள் முடிந்து ரோடும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதிதாக அமைக்கப்பட்ட இந்த ரோட்டில் நத்தம்,கணவாய்பட்டி, கோபால்பட்டி, கொசவபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தாலே ரோட்டில் தண்ணீர் குளம் போல் தேங்குகிறது.இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கின்றனர். தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் ரோடும் விரைவாக சேதம் அடைவதோடு வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தண்ணீர் தேங்கும் பகுதிகளை போர்க்கால அடிப்படையில் மீண்டும் தண்ணீர் தேங்கா வண்ணம் சீரமைக்க வேண்டும்.
செல்வம், ஓ.பி.எஸ்., அணி ஒன்றிய செயலாளர், நத்தம்.

