தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணி: விவசாயிகளுக்கு அழைப்பு

மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணி: விவசாயிகளுக்கு அழைப்பு

மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணி: விவசாயிகளுக்கு அழைப்பு


UPDATED : செப் 05, 2026 08:56 PM

ADDED : செப் 05, 2026 08:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2026 08:56 PM ADDED : செப் 05, 2026 08:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்:நத்தம் வட்டாரத்தில் 21 கிராமங்களில் நடப்பு காரீப் பருவத்தில் மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இதில் பணியாற்ற விவசாயிகள், தன்னார்வலர்கள், பட்டதாரிகள் வரவேற்கபடுகிறார்கள்.

பயிர் சாகுபடி கணக்கெடுப்பு செய்வதால் விவசாயிகளுக்கு பயிர் வாரியாக ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. தரிசு நிலத்தை பதிவு செய்ய ரூ.3-ம், பயிர் சாகுபடி செய்யப்பட்டதை பதிவு செய்ய ரூ.5-ம், ஒரே உட்பிரிவில் கூடுதலாக பயிர் செய்யப்பட்டிருந்தால் ரூ.9ம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு உதவி வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என நத்தம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மனோஜ்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us