ADDED : மார் 30, 2025 03:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : வத்தலகுண்டு ஸ்ரீசத்யசாய் மீனாட்சி நிகேதனம் குருகுலத்தில் விளையாட்டு விழா பரிசளிப்பு ,மின்இதழ் வெளியீட்டு விழா நடந்தது.
குருகுல பொறுப்பாளர் அழகர்சாமி தலைமை வகித்தார். தமிழ்மழை வேத வழிபாடு நடந்தது. இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலை கல்வி ஆலோசகர் மதிவாணன் மின்இதழை வெளியிட்டார். போட்டிகளில் வென்றவர்களுக்கு நியுஜெனரேஷன் ரோட்டரி சங்க தலைவர் திருப்பதி, மீனாம்பிகை பரிசளித்தார். பேராசிரியர் பெர்லின் நன்றி கூறினார். உபபாலகா மகிமா, ஜெயந்தி ஏற்பாடுகளை செய்தனர்.