ADDED : ஏப் 05, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
கன்னிவாடி:குட்டத்துப்பட்டி புனித பதுவை அந்தோணியார் சர்ச்சில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பங்குத்தந்தை சவுந்தர் தலைமை வகித்தார். முன்னதாக சிறப்பு திருப்பலி, கூட்டுப் பிரார்த்தனை, விழா திருப்பலி, புனிதர்களின் ரத ஊர்வலம் நடந்தது.
இதுபோல் கு.ஆவரம்பட்டி புனித சவேரியார் சர்ச், கன்னிவாடி, காரமடை, கரிசல்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, ஆத்தூர், வக்கம்பட்டி, ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, என்.பஞ்சம்பட்டி, எம்.அம்மாபட்டி உள்ளிட்ட இடங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் நடந்தது.
-
