ADDED : ஏப் 26, 2025 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் நடவடிக்கையை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் இ.கம்யூ., சார்பில் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் கிருஷ்ணசாமி, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட கவுரவ தலைவர் சந்திரமோகன், மாநில தலைவர் காசி விஸ்வநாதன் கலந்து கொண்டனர். மாவட்ட துணைச் செயலாளர் வினோத்குமார் நன்றி கூறினார்.

