ADDED : மார் 22, 2025 04:40 AM

திண்டுக்கல்: ''கல்வி என்பது முடிவில்லாதது''என முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு பேசினார்.
திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலை கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 1060 மாணவிகளுக்கு இளம்கலை, முதுகலை பட்டங்களை வழங்கிய அவர் பேசியதாவது: நான் வேளாண் கல்லுாரியில் படித்து முடித்த போது எனது வாழ்வின் செயல்பாடுகள் அனைத்தும் முடிந்ததாக நிம்மதியடைந்தேன். அதற்கு பிறகு தான் அதிகம் தேர்வு எழுதினேன். அதிக பட்டங்கள், அதிக அனுபவங்களை பெற்றுகொண்டேன். கல்வி என்பது முடிவில்லாதது. தொடர்ந்து உங்கள் அறிவை மேம்படுத்தி கொண்டே இருந்தால் தான் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் முறையாக கற்ற கல்வி வேண்டுமானால் முடிந்திருக்கலாம். ஆனால் வாழ்வில் கற்றுகொள்ளும் கல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும். நீங்கள் கற்ற அறிவை, இந்த சமூகம் வழங்கிய ஆற்றலை இந்த சமூதாயத்திற்கு திரும்பித்தர வேண்டும். அர்ப்பணிப்புள்ள ஆசிரியராக வேண்டும். சுய தொழில்களும் தொடங்கலாம். நீங்கள் பெறும் பட்டங்கள் உங்களை பளபளப்பாக மாற்றுவதற்கு அல்ல. பயனுள்ளதாக ஆக்குவதற்கு என்றார். பொறுப்பு முதல்வர் நாகநந்தினி தலைமை வகித்தார்.