/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஏ.டி.எம்.,ல் முதியவரை ஏமாற்றி பணம் திருட்டு
/
ஏ.டி.எம்.,ல் முதியவரை ஏமாற்றி பணம் திருட்டு
ADDED : ஏப் 13, 2025 03:50 AM
பழநி,: பழநியில் முதியவரை ஏமாற்றி ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்
பழநி பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி 64. பழநி ஸ்டேட் பாங்க் ரோட்டில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க முயன்றார். அங்கு வந்த நபர் பணம் எடுத்து தருவதாக கூறி ஏ.டி.எம்., கார்டை பெற்று வேறு கார்டை கொடுத்துள்ளார். கிருஷ்ணசாமி கணக்கில் இருந்து பணம் திருடு போனது.
போலீசார் விசாரணையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ராஜமுகமது 46, ஏமாற்றியது தெரிந்தது. இவர் கோயமுத்துார், பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்க வரும் முதியவர்களை குறி வைத்து அவர்களது ஏ.டி.எம்., கார்டை ஏமாற்றி பணம் திருடி வந்தது தெரிய பழநி டவுன் போலீசார் கைது செய்தனர்.

