ADDED : ஏப் 07, 2026 10:46 PM
அ நிறம் | அளவு
பழநி:பழநியில் முதியவரை கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபரை போலீசார் தேடுகின்றனர்.
பழநி மேற்கு ரத வீதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி ராஜமாணிக்கம் 67. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கூலி தொழிலாளி பிரபாகரன் 33. ஏப்.,4 காலை ராஜமாணிக்கம் வீட்டின் வாசலில் அமர்ந்து ஆபாசமாக பேசி கொண்டிருந்தாராம். இதை பிரபாகரன் தட்டிக்கேட்டதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரபாகரன் கல்லால் ராஜமாணிக்கத்தை தாக்கி விட்டு தப்பினார். படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு பழநி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ராஜமாணிக்கம் ஏப்.,6 இரவு இறந்தார். பழநி டவுன் போலீசார் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி தலைமறைவான பிரபாகரனை தேடி வருகின்றனர்.
