ADDED : நவ 19, 2026 09:06 PM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட தேர்தல் கல்வி அறிவு குழுக்கள் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா, கட்டுரைப் போட்டிகள் தாலுகா அளவில் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (நவ.,19) போட்டிகள் நடந்தது.
வினாடி வினா போட்டியை கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயந்தி துவக்கி வைத்தார். முதன்மைக் கல்வி அலுவலர் செல்வக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். வினாடி வினா போட்டியை அய்யலுார் அரசு உயர்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெத்தவண்ணஅரசு தொகுத்து நடத்தினார். கட்டுரைப் போட்டியை திண்டுக்கல் இலக்கிய களத்தின் துணைத்தலைவர் கோவிந்தராசு தொகுத்து நடத்தினார்.
பின்னர் மாலையில் நடந்த விழாவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் துர்கா பரிசு, சான்றிதழ் வழங்கினார். வி.ஐ.பி., வரவேற்பு பிரிவு தாசில்தார் சரவணன், தேர்தல் பிரிவு தாசில்தார் முத்துராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
