ADDED : மார் 26, 2026 06:09 AM

அ நிறம் | அளவு
வடமதுரை: அரிய வகை பாலுாட்டியான தேவாங்கை அழிவில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் அய்யலுார் பூனைக்கரட்டில் தேவாங்கு பாதுகாப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த பெருமையை கொண்டாடும் வகையிலும், தேவாங்குகள் குறித்து விழிப்புணர்வு அதிகரிக்கவும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு பிரசாரத்தில் தேவாங்கு உருவத்துடன் 'லோகோ' தயாரித்து வெளியிட்டது. இதையடுத்து மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் இந்த 'லோகோ' பொது இடங்களில் நிறுவும் பணி மும்முரமாக நடக்கிறது.
