தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தேர்தல் செலவு: இன்று முதல் ஆய்வு

 தேர்தல் செலவு: இன்று முதல் ஆய்வு

 தேர்தல் செலவு: இன்று முதல் ஆய்வு


ADDED : மே 29, 2026 02:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 02:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 4023 வேட்பாளர்களின் வரவு, செலவு கணக்கு விபரங்களை செலவின பார்வையாளர்கள் இன்று முதல் ஆய்வு செய்ய உள்ளனர்.

சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் 4023 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இவர்கள் ரூ.40 லட்சம் வரை மட்டுமே செலவு செய்திருக்க வேண்டும். செலவு விபரங்களை தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் சமர்ப்பித்திருக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காத வேட்பாளர் கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

சமர்ப்பிக்கப்பட்ட செலவின விபரங்களை இன்று (மே 29) முதல் ஜூன் 5 வரை தேர்தல் செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அரசு அதிகாரிகள் தொகுதிவாரியாக ஆய்வு செய்ய உள்ளனர்.

ஜூன் 5 மாலை 5:00 மணிக்குள் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிப்பர். ஜூன் 6 முதல் அவர்கள் தங்களின் வழக்கமான பணிக்கு திரும்புவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us