ADDED : செப் 11, 2026 06:42 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம், செப்.12-
அறிவிக்கப்படாத மின்தடையை கண்டித்து விருப்பாச்சி கிராம மக்கள் ஒட்டன்சத்திரம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஒட்டன்சத்திரம் ஒன்றியம் விருப்பாச்சி கிராமத்தில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருகிறது. பகலில் 3 மணி நேரம் இரவில் 3 மணி நேரம் என நாள்தோறும் 6 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் தடைபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விருப்பாச்சி கிராம மக்கள் ஒட்டன்சத்திரம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு ஏற்படாவிட்டால் மறியல் செய்யப்போவதாக தெரிவித்தனர்.
