/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விபத்துக்காக காத்திருக்கும் மின்வாரியம்
/
விபத்துக்காக காத்திருக்கும் மின்வாரியம்
ADDED : டிச 11, 2024 04:44 AM

வடமதுரை : வடமதுரை நாடுகண்டனுாரிலிருந்து அத்திக்குளத்துப்பட்டி செல்லும் ரோட்டில் டிச.8ல் சென்ற வைக்கோல் லாரி மின் ஒயரில் உரசியதால் அடுத்தடுத்து 3 கம்பங்கள் பாதிப்படைந்தன. ஒரு கம்பத்தில் உச்சி பகுதி நொறுங்கிய நிலையிலும், மற்ற இரண்டும் சாய்ந்துள்ளன. இதனால் இந்த ரோட்டில் தற்போது மின் ஒயர்கள் மிக தாழ்வான உயரத்தில் செல்கின்றன. இவ்வழியே பள்ளி வாகனங்கள், கனரக வாகனங்கள் அதிகளவில் செல்லும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் நிலை உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
வைக்கோல் லாரி மின் ஒயரில் உரசி மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டதும் மின்வாரிய அதிகாரிகளிடம் லாரியை ஒப்படைத்தோம். ஆனால் என்ன பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என தெரியவில்லை. இதுவரை சீரமைப்பு பணி நடக்கவில்லை. இங்கு எப்போது மின்விபத்து நடக்கும் என தெரியவில்லை. விபத்தை தடுக்க கீழ் பகுதியில் கற்களை வைத்து சிறிய எச்சரிக்கை விழிப்புணர்வு செய்துள்ளனர். மீண்டும் விபத்து நடக்கும் முன்னரே சீரமைப்பு பணி செய்ய வேண்டும் என்றார்.

