ADDED : ஜூலை 30, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை; தமிழ்நாடு மின்சார வாரியத்தில்   ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டர் விடப்பட உள்ளது.
ஸ்மார்ட் மீட்டரானது  அலைபேசிக்கு ரீசார்ஜ் செய்வதை போல் ரீசார்ஜ் செய்தால்  போதும் ஒரு மாதத்திற்கு பயன்படுத்தலாம்.
கூடுதல் உபயோகத்து  இடையிலே தீர்ந்து போனாலும்  உடனே ரீசார்ஜ் செய்ய வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு மின்வாரியம்  தனியாருக்கு டெண்டர் விட உள்ளது.
இதை கண்டித்து குஜிலியம்பாறை மின்வாரிய அலுவலகத்தின் முன்பு டி.என்.இ.பி., எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சங்கத்தின் சார்பாக  ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இணை செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார்.

