தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ யானை நடமாட்டம் வீடியோ வைரல்

யானை நடமாட்டம் வீடியோ வைரல்

யானை நடமாட்டம் வீடியோ வைரல்


ADDED : செப் 14, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 06:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி- கொடைக்கானல் ரோட்டில் இரவில் யானை நடமாடும் வீடியோ வைரல் ஆனது.

பழநி கொடைக்கானல் ரோட்டில் யானை நடமாட்டம் அடிக்கடி உள்ள பகுதிகள் உள்ளன. இங்கு வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ரோட்டில் நடமாடும் யானைகளால் வாகனங்களுக்கும் இதுவரை எந்தவித தொந்தரவும் ஏற்பட்டதில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஒற்றை யானை பழநி- கொடைக்கானல் ரோட்டில் நடந்து செல்லும் போது எதிரே வந்த வாகனத்தில் இருந்து இரவில் படம் பிடிக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அப்பகுதியினர் ஒற்றை யானையின் நடமாட்டம் அடிக்கடி இருப்பதாக தெரிவிக்கின்றனர். கொடைக்கானல் ரோட்டில் இரவு நேரங்களில் செல்லும் போது வனவிலங்குகளை கவனித்து வாகனங்களை இயக்க வேண்டும். குறிப்பாக வனப்பகுதிக்குள் வாகனங்களை இயக்கும் போது எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க டிரைவர்களை கேட்டுக்கொள்கிறோம் என வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us