விவசாய நிலங்களில் புகுந்த யானைகள்: கண்டுக்காத வனத்துறை
விவசாய நிலங்களில் புகுந்த யானைகள்: கண்டுக்காத வனத்துறை
UPDATED : ஜூன் 06, 2026 09:26 PM
ADDED : ஜூன் 06, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
தாண்டிக்குடி:தாண்டிக்குடி மலைப்பகுதியில் முகாமிட்டுள்ள இரு காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
தாண்டிக்குடி தடியன்குடிசை ரோட்டில் இரு காட்டு யானைகள் இரவில் நடமாடி வருகின்றன. அவை மலைப்பகுதியிலே முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. ரோட்டோரங்களில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன.கானல்காடு பகுதி விவசாய நிலங்களில் புகுந்து மலை வாழை, காபி, ஏலக்காய் , சூரிய மின்வேலியை சேதப்படுத்தின.
வனத்துறையினர் பெயரளவிற்கு வாகனங்களில் ரோந்து சென்று வெடிகளை வெடித்து யானைகளை விரட்டுகின்றனர். ஆனாலும் அவர்களுக்கு போக்கு காட்டி தொடர்ந்து முகாமிடுகின்றன.
