
வேடசந்துார்: வேடசந்துார் தொகுதியில் உள்ள படித்த பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை என 3 ஒன்றியங்களில் உள்ள, 10, 12, டிப்ளமோ, படித்த பட்டதாரி பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வேடசந்துாரில் நடந்தது. ஓசூரில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் தயாரிக்கும் நிறுவனத்தின் சார்பில், அங்குள்ள காலி பணியிடங்களுக்கான நேரடி தேர்வு நடந்தது. வேடசந்துார் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் பரமசிவம் தலைமை வகித்தார். டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறை அலுவலர் சிவசக்தி முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., ஒன்றியச் செயலாளர் ஜான் போஸ், நகரச் செயலாளர் பாபு சேட், நிர்வாகிகள் ஆறுமுகம், சிவக்குமார், தண்டபாணி, அம்மையப்பன், அழகுராஜா, சந்திரசேகர், காளியப்பன், நெடுஞ்செழியன், நாட்ராயன், வீராச்சாமி, புஷ்பா பங்கேற்றனர்.

