தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பாதயாத்திரை பாதையில் முளைக்கும் ஆக்கிரமிப்பு கடைகள்

 பாதயாத்திரை பாதையில் முளைக்கும் ஆக்கிரமிப்பு கடைகள்

 பாதயாத்திரை பாதையில் முளைக்கும் ஆக்கிரமிப்பு கடைகள்


ADDED : ஜன 01, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2026 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களின் பாதை ஆக்கிரமிப்பால் பக்தர்கள் ரோட்டில் நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது

பழநி முருகன் கோயிலுக்கு வரும் தைப்பூச பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால், எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புது, பழைய தாராபுரம் ரோடுகள், திண்டுக்கல் ரோடு, உடுமலை, மடத்துக்குளம் ரோடு பகுதிகளில் தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. பாதயாத்திரை பக்தர்களுக்கான தனிப்பாதையில் தற்காலிக கடைகள், கணக்கன்பட்டி, திருநகர், ஆயக்குடி பகுதிகளில் முளைத்துள்ளன. மேலும் சில இடங்களில் பாதயாத்திரை பாதைகளில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் பக்தர்கள் ரோட்டில் இறங்கி நடக்கும் நிலை ஏற்படுகிறது. இச்சூழல் காரணமாக வேகமாக வரும் வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே உள்ளாட்சி அமைப்புகள் இப்பாதையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us