UPDATED : நவ 25, 2026 09:15 PM
ADDED : நவ 25, 2026 09:12 PM
அ நிறம் | அளவு
பழநி:
பழநி பஸ் ஸ்டாண்ட்டில் கரூர், திண்டுக்கல், மதுரை, பொள்ளாச்சி, கோவை உட்பட வெளியூர் செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில், பயணிகளுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளதாக புகார்கள் எழுந்தது.
இதையடுத்து கமிஷனர் ராஜலட்சுமி உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அங்கு மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் நகராட்சியினர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
