/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலுக்கு மாற்று ரோடு கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
/
கொடைக்கானலுக்கு மாற்று ரோடு கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
கொடைக்கானலுக்கு மாற்று ரோடு கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
கொடைக்கானலுக்கு மாற்று ரோடு கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
ADDED : ஜூலை 11, 2025 03:17 AM

கொடைக்கானல்: கொடைக்கானலில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று ரோடு அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை தென்மண்டல கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.
கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். சீசன், வார நாட்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று ரோடு அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது.
இதையடுத்து சில மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு கொடைக்கானல்- வில்பட்டி ரோட்டை ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என தெரிவித்தார்.
ரோடு அமைப்பது குறித்து அதிகாரிகள் , உள்ளூர்வாசிகளிடையே இரு வேறு கருத்துக்கள் எழுந்தன. வில்பட்டி புலியூர் வழியாக ரோடு செல்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாரதி அண்ணா நகர் அல்லது பேச்சியம்மன் கோயில் வழியாக ரோட்டை மாற்றி அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். நெடுஞ்சாலைத்துறை தென்மண்டல கண்காணிப்பு பொறியாளர் செல்வநம்பி கோவில்பட்டி பகுதியில் மாற்று ரோடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். வழித்தடங்கள் குறித்து அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்தார். ஆய்வுக்குப் பின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ரோடு வரைபடம் முடிவு செய்து அறிக்கை வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.