ADDED : ஜூன் 06, 2025 03:02 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மாணவர்கள் காலநிலை மாற்றம், பல்லுயிர் பாதுகாப்பு போன்ற முக்கிய பிரச்னைகள் குறித்த செய்தி பலகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பள்ளியை சுற்றிய பகுதிகளில் துாய்மை பணியை மேற்கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். பள்ளி முதல்வர் சவும்யா முன்னிலையில் ஆசிரியர்கள், மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் உறுதிமொழியை ஏற்றனர்.
திண்டுக்கல் : சுற்றுச்சூழலை வலியுறுத்தி திண்டுக்கல்லில் செவாலியர் அகாடமி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.பள்ளி தாளாளர்சேசு ஆரோக்கியம் துவக்கி வைத்தார். துணை முதல்வர் ஞானசீலா முன்னிலை வகித்தார். செவாலியர் பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் சிலுவத்தூர் ரோடு வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. மரக்கன்றுகள் நடப்பட்டன.
* நேருஜி நினைவு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியை தேன்மொழி வரவேற்றார். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்டப் பொறியாளர் குணசேகரன் தலைமை வகித்தார். மேயர் இளமதி துவக்கி வைத்தார். இந்தியன் ரெட்கிராஸ் சங்க மாவட்ட தலைவர் காஜா மைதீன் , ஜி.டி.என்., கல்லுாரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் பேசினர்.மஞ்சள் துணிப் பைகள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
வினாடி வினா, படம் வரைதல் போட்டிகளில் வென்றோருக்கு பரிசு வழங்கப்பட்டது. இளைய பாரதம் ஜெகதேசன் நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து ஏற்பாடுகளை செய்தார்.
பட்டிவீரன்பட்டி : செங்கட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம், மாணவர் சேர்க்கை நடந்தது. தலைமை ஆசிரியர் சாரதா தேவி தலைமை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர் விஜயலட்சுமி முன்னிலையில் சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்கப்பட்டது. கட்டுரை, பேச்சு போட்டிகள் நடந்தது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடந்தது.
கொடைக்கானல்: கொடைக்கானலில் தமிழகம், புதுச்சேரி சுற்றுச்சூழல் தலைவர் டி.பி.ரவீந்திரன் பழ மரக்கன்றுகளை நடவு செய்தார். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விளக்கப்பட்டது.
சன் லயன்ஸ் சங்கத் தலைவர் செந்தில்குமார், செயலர் சுரேஷ் பால் ராஜ், பொருளாளர் ஆஷா ரவீந்திரன் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்களிடயே நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலம் நடத்தப்பட்டது. தலைமையாசிரியர் பீட்டர் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் ஏற்பாடுகளை செய்தார்.
வேடசந்துார்: குடகனாற்றில் உள்ள பேரூராட்சி பகுதி எல்லைக்குள் பிளாஸ்டிக் ஒழிப்பு ,கருவேல முட்கள் அகற்றும் பணி, நடந்தது. வீகா பவுண்டேஷன், வாஸ் இன்ஸ்டிடியூட் , வீரா.சாமிநாதன் அறக்கட்டளை, வேடசந்துார் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற இதை அறக்கட்டளை தலைவர் வீரா.சாமிநாதன் துவக்கி வைத்தார்.
பேரூராட்சித் தலைவர் மேகலா, தி.மு.க., நிர்வாகிகள் கார்த்திகேயன், ரவிசங்கர், முன்னாள் ஊராட்சி தலைவர் குப்புசாமி, உள்ளூர் பிரமுகர்கள் பன்னீர்செல்வம், நாகராஜ், மணிமாறன் பங்கேற்றனர்.