ADDED : ஆக 25, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
நத்தம், ஆக.26
-நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டி பகுதியில் அறிவொளி கரங்கள் கல்வியியல் அறக்கட்டளை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
நிறுவன தலைவர் அழகர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நத்தம் பகுதியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவது, இலவச கல்வி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
