தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பிளாஸ்டிக் ஒழிப்பு மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

பிளாஸ்டிக் ஒழிப்பு மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

பிளாஸ்டிக் ஒழிப்பு மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு


ADDED : நவ 03, 2025 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 03, 2025 05:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம் என்.பி.ஆர்., கல்லூரி நிர்வாகம் நாட்டுநலப்பணித்திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடுவது, பிளாஸ்டிக் சேகரிப்பில் ஈடுபட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்து வருகிறது.

மேலும் பண்டிகை தினங்களில் முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியோர்களுக்கு உதவி செய்து மாணவர்களின் சமூக சேவை பண்புகளையும் வளர்கிறது.

கரந்தமலை, சிறுமலை, அழகர்கோவில் மலை, கடவூர் மலை என மலைகள் சூழ்ந்து இயற்கை எழில் கொஞ்சும் நகராக நத்தம் உள்ளது.

இயற்கைக்கு பஞ்ச மில்லாத இப்பகுதியில் கரந்தமலை அடிவாரப் பகுதியில் உள்ள நத்தம் என்.பி.ஆர்., கல்வி குழுமத்தின் சார்பாக மாணவர்கள் மூலம் மரக்கன்றுகள் நட்டு இயற்கையை காப்பதுடன், மாணவர்கள் மனதில் மரம் நடும் பழக்கத்தை உருவாக்கி வருகின்றனர்.

மேலும் என்.பி.ஆர்., கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தின் மூலம் மாணவர்களைக் கொண்டு நத்தம் அம்மன்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குளங்களில் குப்பைகளை சேகரித்தல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்துகின்றனர்.

இதன் மூலம் சுற்றுச் சூழலை பாதுகாப்பதுடன், குளங்களில் சுத்தமான நீர்த்தேக்கத்திற்கு பெரும் உதவி செய்கின்றனர்.

அதேபோல் போதைப் பொருளுக்கு எதிராக நத்தம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு ஒவ்வொரு ஆண்டும் விழிப்புணர்வு பேரணிகளை நடத்துகின்றனர்.

வருடத்திற்கு 10 ஆயிரம் மரங்கள் ப.தேவேந்திரன், தலைவர்-, இலக்கில்லா மரங்கள் நடும் நண்பர் குழு, நத்தம்: கல்லூரியில் படிப்பு மட்டுமல்லாது, நாட்டு நலப்பணி திட்டத்தின் மூலம் கல்லூரி நிர்வாகம் மரம் நடும் பழக்கம், மரம் நடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் சமூக சேவை பழக்கத்தை உருவாக்க என பல்வேறு விஷயங்களையும் கற்றுக் கொடுத்தனர். இதன் மூலமாக நான் தற்போது இயற்கை ஆர்வலராகவும், சமூக சேவகராகவும் உள்ளேன்.

அனைவரும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 2017ம் ஆண்டு தொடங்கி இன்று வரை இந்த மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறோம்.

வருடத்திற்கு 10 ஆயிரம் மரங்கள் என்ற நோக்கத்தோடு தற்போது வரை செயல்பட்டு வருகிறோம்.

அரசு கல்லூரிகள் அரசு பள்ளிகள் முதலிய மாணவர்களிடம் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி அந்த மரங்களின் முக்கியத்துவத்தையும் கூறி அவர்களின் கரங்களாலே மரங்களை வைத்து வளர்த்து வருகிறோம்.

இதனை பாராட்டி அரசு மற்றும் பல அமைப்புகள் 2023 ஆம் ஆண்டிற்கான அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பசுமை முதன்மையாளர் விருதினை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் வழங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us