UPDATED : ஜூன் 22, 2026 05:36 PM
ADDED : ஜூன் 22, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்:வேடசந்துார் வட்டார ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. சங்கத்தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் தங்கவேல் வரவேற்றார்.
சங்க பொதுக்குழு, 37வது ஆண்டு விழாவை ஆக.,19ல் நடத்துவது, பொறுப்பாளர்கள், வங்கி மேலாளர்களை அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது. ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி ஆணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பொருளாளர் வரதராஜ், செயலாளர் மருதையப்பன், துணை செயலாளர் ராஜாசண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
