ADDED : நவ 23, 2026 05:15 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:
திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர்கள் மோகன், காமாட்சி ஆகியோர் தலைமையில் இன்று (நவ.,23) நடந்தது.
முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி, சக்ரபாணி, எம்.எல்.ஏ.,செந்தில்குமார் பங்கேற்று முன்னாள் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்குவது குறித்து பேசினர்.
வேடசந்துார் எம்.எல்.ஏ.,சாமிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் காந்திராஜன், ஆண்டி அம்பலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
