ADDED : ஜூலை 21, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்,: மெய்யம்பட்டியில் நத்தம் சிட்டி அரிமா சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் அகமது அபுரார், பொருளாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
மூத்த உறுப்பினர் ராம்சன்ஸ் ராமசாமி வரவேற்றார். சங்க கவர்னர் ரகுவரன், மண்டல தலைவர் ஹரிஸ்வர்தன், வட்டார தலைவர் மனோதீபன், ஒருங்கிணைப்பாளர் விமல்குமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி தலைவராக பாண்டி, செயலாளராக முருகேசன், பொருளாளராக விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டனர்.