/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எஸ்.எம்.பி., பள்ளியில் கண்காட்சி
/
எஸ்.எம்.பி., பள்ளியில் கண்காட்சி
ADDED : பிப் 03, 2025 05:46 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் எஸ்.எம்.பி., பள்ளியில் 'டெக் ஆர்டிஸ்ட்ரி' என்ற கலை, இயந்திரவியல் கண்காட்சி நடந்தது. திண்டுக்கல் நாடார் உறவின்முறை எஸ்.எம்.பி. மாணிக்கம் நாடார் பாக்கியத்தம்மாள் நேஷனல் பப்ளிக் பள்ளியில் (சி.பி.எஸ்.இ.,) மாணவர்களால் நடத்தப்பட்ட 'டெக் ஆர்டிஸ்ட்ரி' என்ற கலை,இயந்திரவியல் கண்காட்சியை பள்ளியின் செயலாளர் , தாளாளர் ராமதாஸ் தொடங்கி வைத்தார்.
பள்ளி ஆட்சிக்குழுவின் தலைவர் அன்பரசன், பொருளாளர் வெங்கடேசன் தலைமை வகித்தனர். குறும்படம், புகைப்படம் எடுத்தல், கிரேன், கிளைம்பிங் ரோபோட், சோலார் போட், எஸ்கலேட்டர், லிப்ட், நிலநடுக்கத்தை முன்னறிவிக்கும் ரோபோ உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்கள் இடம் பெற்றிருந்தன. வேறுபட்ட வடிவங்களிலிருந்து கலைப்பொருட்கள், லேயர் ஆர்ட் அன்ட் அனிமேஷன், டிஜிட்டல் 3டி மாடலிங், பேஷன் டிசைனிங், கேம் டிசைனிங், கிரீன் மேட் எஸ்டுடியோ பயன்படாத பொருட்களிலிருந்து பல கலைவண்ணங்களை செய்தனர். தாளாளர் ராமதாஸ் கண்காட்சியை வழிநடத்திய ஆசிரியர்கள், பங்கேற்ற மாணவர்களை பாராட்டினார்.

