/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காலாவதி மாத்திரைகள் 'கொடை' வனத்தில் வீச்சு; வனவிலங்குகள் பலியாகும் அபாயம்

ADDED : அக் 01, 2025 08:08 AM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் டைகர் சோலை வனப்பகுதியில் உயிர்காக்கும் காலாவதி மாத்திரைகள் வீசப்பட்டுள்ளன. இதை அறியாது உண்ணும் வனவிலங்குகள் பலியாகும் அபாயமும் உள்ளது.
கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி டைகர் சோலை அருவி அருகே காலாவதி மாத்திரைகள் மூடையில் கட்டி வீசப்பட்டிருந்தது. நேற்று இவ்வனப்பகுதியில் தன்னார்வர்லர்கள் மூலம் துாய்மை பணியை வனத்துறை மேற்கொண்ட போது காலாவதி மாத்திரைகள் வீசப்பட்டிருந்தது தெரிந்தது.
இவை அரசு மருத்துவமனை, சுகாதாரத்துறை சார்ந்தவையாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. வனப்பகுதியில் இந்த மாத்திரைகள் வீசப்பட்டுள்ளதால் வனவிலங்குகள் இதை உண்டு பலியாகும் அபாயம் உள்ளது.
காலாவதி மாத்திரைகளை வீசிய நபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.