ADDED : அக் 01, 2025 08:05 AM
அ நிறம் | அளவு
கொடைக்கானல் : கொடைக்கானல் சன் லயன்ஸ் சங்கம் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை,மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
லயன் சங்கத் தலைவர் செந்தில்குமார், செயலாளர் சுரேஷ் பால்ராஜ், பொருளாளர் டாக்டர் நீத்துகிரன், சன் லயன்ஸ் நிறுவனத் தலைவர் டி.பி. ரவீந்திரன் ஆர்.டி.ஓ., திருநாவுக்கரசு, டி.எஸ்.பி., யுவப்பிரியா கலந்து கொண்டனர்.டாக்டர்கள் விஷ்ணு அனுராக் சிகிச்சை அளித்தார். ஒருங்கிணைப்பாளர் ராதா மணவாளன் ,சன் லன்ஸ் சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். சங்க முன்னாள் தலைவர் ஆஷா ரவீந்திரன் நன்றி கூறினார்.
