தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/போலி ஐ.டி., கார்டு வழக்கு

போலி ஐ.டி., கார்டு வழக்கு

போலி ஐ.டி., கார்டு வழக்கு


ADDED : மார் 28, 2024 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2024 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போலி ஐ.டி., கார்டு: முன்னாள் ராணுவ வீரர் கைது



வடமதுரை:தேனி அல்லிநகரத்தை சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் ஜனார்த்தனன் 47. கொரோனா பிரச்னையால் 2020 ஜூனில் மாவட்ட எல்லையை கடந்து செல்ல பல கட்டுப்பாடுகள் இருந்தன.

அப்போது திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தங்கம்மாபட்டியில் திருச்சி மாவட்ட எல்லையை கடக்க முயன்ற ஜனார்த்தனன், 'தான் பிரதமரின் பாதுகாப்பு குழுவில் பணியாற்றும் ராணுவ வீரர் எனவும், 2027 வரையில் செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்துள்ளதாகவும்' ஒரு அட்டையை காட்டி கடந்து சென்றார்.

இதன் உண்மை தன்மையை விசாரிக்க நடவடிக்கையை போலீசார் எடுத்தபோது, பிரதமரின் பாதுகாப்பு குழுவில் அவர் 2015 வரை மட்டுமே வேலை பார்த்ததும், பின்னர் பணி ஓய்வு பெற்று சென்றதும் தெரிந்தது.

இதுதொடர்பான விசாரணையில் 4 ஆண்டுகள் கடந்த நிலையில், போலி அடையாள அட்டை காட்டியதாக வடமதுரை போலீசார் நேற்று ஜனார்த்தனனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us