ADDED : ஜூலை 17, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை: -திண்டுக்கல் ஓய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்தவர் ஹாஜகான். பெரியூர்பட்டி அரசு உயர்நிலைபள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
தினமலர் லட்சிய ஆசிரியர் விருது பெற்றுள்ளார். இவர் தற்போது செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான வழியனுப்பு விழா நேற்று பள்ளியில் நடந்தது. மாணவர்கள் வேறு பள்ளிக்கு செல்ல வேண்டாம் என கூறி கண்ணீர் சிந்தினார்.
அவர்களை தேற்றிய ஆசிரியர் ஷாஜகான் பொம்மை முகமூடி அணிந்து பாடல்களை பாடியபடி சென்று வருகிறேன் என கூறி நடனமாடி சென்றார்.