ADDED : மார் 15, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி : தாண்டிக்குடி பாச்சலூரை சேர்ந்தவர் முத்துதேவர் 72.
பாச்சலுார் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் பந்தல் அமைத்து அவரை விவசாயம் செய்தார். இவர் தனது தோட்டத்தில் உள்ள பயிர்களை காக்க சென்றார். அங்கு மறைந்திருந்த காட்டுமாடு இவரை தாக்கியது. இதில் முத்துதேவர் இறந்தார். ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தனர். தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

