ADDED : ஜூலை 30, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி; திண்டுக்கல் மாவட்டம் பூலத்தூர் மணிநகரை சேர்ந்தவர் பால்பாண்டி 30. நேற்று முன்தினம் இரவு நண்பர் ராமகிருஷ்ணன் டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்தார். பூலத்துார் அருகே மேடான பகுதியில் டூவீலர் திடீரென நிற்க இறங்கிய பால்பாண்டியை புதரில் மறைந்திருந்த காட்டுமாடு தாக்கியதில் பலியானார். தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா, உதவி வன பாதுகாவலர் கருப்பையா பலியான பால்பாண்டியன் உடலை பார்வையிட்டு அரசு நிவாரண நிதியான ரூ. 10 லட்சத்தில் முதற்கட்டமாக ரூ. 50 ஆயிரத்தை வழங்கினர்.

