/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மலைப்பூண்டிற்கு நிலையற்ற விலையால் விவசாயிகள் பாதிப்பு
/
மலைப்பூண்டிற்கு நிலையற்ற விலையால் விவசாயிகள் பாதிப்பு
மலைப்பூண்டிற்கு நிலையற்ற விலையால் விவசாயிகள் பாதிப்பு
மலைப்பூண்டிற்கு நிலையற்ற விலையால் விவசாயிகள் பாதிப்பு
ADDED : நவ 04, 2025 04:25 AM

கொடைக்கானல் :  கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைச்சல் காணும் மலைப் பூண்டிற்கு நிலையற்ற விலையால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
இம்மலைப் பகுதியில் ஏராளமான ஏக்கரில் ஆண்டுக்கு இருமுறை மலைப்பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது.மருத்துவ குணம் உள்ள மலைப்பூண்டிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இருந்தும் நிலையற்ற விலையால் விவசாயிகள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுவது  தொடர்கிறது.  2024ல்  விளைச்சல் பாதிப்பால் கிலோ ரூ. 700 என நல்ல விலை கிடைத்ததால் நடப்பாண்டில் கூடுதல் பரப்பில் பூண்டு சாகுபடி செய்யப்பட்டது.
ஆனா ல்  வழக்கத்திற்கு மாறாக நடப்பாண்டு துவக்கத்திலே விலை  கிலோ ரூ. 200 ஆக சரிந்தது. இதனால் செய்வதறியாது விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. பெயரளவிற்கே புவிசார் குறியீடு பெற்ற போதும் நிலையற்ற விலை நீடிப்பதால் விவசாயிகள் ஆண்டு தோறும் நிம்மதியை இழக்கின்றனர்.
குற்றச்சாட்டு இங்கு விளைச்சல் காணும் மலைப் பூண்டை பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் விற்பனைக்கு அனுப்பும் சூழல் நீடிப்பதால் தங்களுக்கு கட்டுப்படியான வேலை கிடைப்பதில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக இருந்தது. இதையடுத்து ஒருங்கிணைந்த வேளாண் விற்பனைக் கூடம் மூலம் விற்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது. அவை பாதியில் கைவிடப்பட்டது.
தொடர்ந்து பூண்டு பதப்படுத்துதல், புகை ஊட்டும் மையம் சில ஆண்டுகளுக்கு முன் பூண்டியில் ரூ. 8.50 கோடி ரூபாயில் கட்டமைக்கப்பட்டும் அவையும் பயனற்ற நிலையில் விவசாயிகள் விலை குறைவான தருணத்தில் பாதுகாக்க முடியாத நிலை  உள்ளது.  பொருளாதார ரீதியாக விவசாயிகளுக்கு கை கொடுக்கும்   பூண்டு விவசாயம் தற்போது தத்தளித்து வருகிறது.
அர சுதா ன் கை கொடுக்கனும் கோபால், விவசாயி: தங்களின் வாழ்வாதாரமாக உள்ள மலைப்பூண்டு சாகுபடிக்கு அரசு திட்டங்களை அறிவித்த போதும் தங்களுக்கு அவை பயனுள்ளதாக அமையவில்லை. மாறாக ஆண்டுதோறும் விலை வீழ்ச்சி, விளைச்சல் பாதிப்பு, சீதோஷ்ண நிலை மாற்றம் என ஏராளமான பிரச்னைகளை சந்தித்து வருகிறோம்.
புவிசா ர் குறி யீடு பெற்ற நிலையிலும் தங்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.கடந்த ஆண்டு நீடித்த விலை தற்போது நடப்பாண்டில் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
இதை நிரந்தர படுத்தவும், சந்தைப்படுத்துதல், பதப்படுத்துதல் மதிப்பு கூட்டு பொருள் உள்ளிட்டவற்றிற்கு அரசு  கை கொடுக்க வேண்டும்.

