தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு  மீண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

 கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு  மீண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

 கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு  மீண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : ஜன 24, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்த முள்ளிப்பாடி, பில்லமநாயக்கன்பட்டி, ம.மு.கோவிலுார் வழியாக ஏ.வெள்ளோடு வரை சுற்றுச்சாலைத் திட்டத்துக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு குறைவான இழப்பீடு வழங்கப்படுவதாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர்.பெருமாள், மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் சரத்குமார் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கீர்த்தனாமணியிடம் மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது: சுற்றுச்சாலைத் திட்டத்துக்கு 300 விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. பலன் தரும் மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன. கிணறுகள் மூடப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. 1.25 ஏக்கருக்கு ரூ.5 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் முன் வந்துள்ளது. இன்றைய சந்தை மதிப்பில் இத்தொகை விவசாயிகளுக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது. 2013 நில எடுப்புச் சட்டத்தின்படி இழப்பீடு நிர்ணயிக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us