/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் ; மழைக்காலம் துவங்கிய நிலையில்
/
கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் ; மழைக்காலம் துவங்கிய நிலையில்
கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் ; மழைக்காலம் துவங்கிய நிலையில்
கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் ; மழைக்காலம் துவங்கிய நிலையில்
ADDED : நவ 03, 2025 04:25 AM

குஜிலியம்பாறை : மழை காலம் துவங்கிய நிலையில் விவசாயிகள் தங்களது அடைப்பு தரிசு நிலங்களில், ரம்ஜான் மற்றும் பக்ரீத் நோன்பை கருத்தில் கொண்டு, செம்மறி ஆட்டுக்குட்டிகள் மற்றும் பசு மாட்டு கன்றுகளை வாங்கி மொத்தமாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில், ஆடிப்பட்டத்தில் போதிய மழை இல்லாத நிலையில் மானாவாரி விவசாயம் என்பது பொய்த்துப் போனது. விதை பொருட்களை வாங்கி வைத்து மழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, கடந்த மாதம் அக்டோபரில் போதிய மழை பெய்ததால், மானாவாரி விவசாயமாக நிலக்கடலை, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர் வகைகளை விவசாயிகள் விதைப்பு செய்துள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் தங்களது தரிசு நிலங்களில், அடைப்பு வேலிகளை போட்டு அடைத்து வைத்துள்ள நிலையில், செம்மறி ஆட்டுக்குட்டிகள் மற்றும் மாட்டு கன்றுகளை வாங்கி விட்டு வளர்க்கின்றனர்.
வெறும் பசுந் தீவனமும், தண்ணீர் மட்டுமே அருந்தி வாழும் இந்த கால்நடை கன்றுகள் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில், நன்கு வளர்ந்து, கொழு கொழுப்பான வளர்ச்சி பெற்ற கால்நடைகளாக மாறிவிடும். பிப்ரவரியில் ரம்ஜான், மேயில் பக்ரீத் என நோம்புகள் அடுத்தடுத்து வரும் நிலையில்,
கறி விருந்துக்கான விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். இது போன்ற சீசன் நேரங்களில் வியாபாரிகள் தோட்டங்களுக்கே தேடிச்சென்று வாங்கி செல்வது குஜிலியம்பாறை, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வாடிக்கையாக உள்ளது. இப்போது மழை காலம் துவங்கிய நிலையில், கடந்த வறட்சி காலங்களில் மாடுகளை வளர்க்க முடியாத விவசாயிகள் கூட, தற்போது கூடுதல் விலை கொடுத்து கறவை மாடுகளையும் வாங்கி வருகின்றனர்.
* கூடுதல் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
விவசாயிகள் கூடுதலான சிரமப்பட்டு விளை பொருட்களை உற்பத்தி செய்தாலும், போதிய விலை கிடைப்பதில்லை. தற்போது, தக்காளி, வெங்காயம், முருங்கை என அனைத்தும் கட்டுபடியான விலை இல்லை. எனவே, மா, தென்னை, நெல்லி போன்ற மாற்று விவசாயத்திற்கு மாறிவரும் நிலையில், கால்நடை வளர்ப்பிலும் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர். செம்மறி ஆட்டு குட்டிகள் மற்றும் மாட்டு கன்றுகளை கூடுதலான எண்ணிக்கையில் வாங்கி, அடைப்பு தரிசுகளில் விட்டு, தானாகவே மேய்ந்து வளரும் வகையில் மேய்த்து வருகின்றனர். கன்று குடிப்பதற்கான தண்ணீரை மட்டும் விட்டால் போதும். இரண்டு, மூன்று மாதங்களில் அவை அனைத்தும் நன்கு வளர்ந்து, ரம்ஜான் பக்ரீத் என நோன்புகளுக்கான சீசன் நேரங்களில் நல்ல விலைக்கு விற்கும். இதனால் விவசாயிகள், ஆட்டுக்குட்டிகள் மற்றும் மாட்டு கன்றுகளை வாங்கி அடைப்புத் தரிசுகளில் வைத்து வளர்த்து வருகின்றனர் என்றார்.
-- ஏ.ராஜரத்தினம், விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர், திண்டுக்கல்

