ADDED : டிச 20, 2025 06:05 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட துணை செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர் அம்மையப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கந்தசாமி, சந்துரு, விவசாய சங்க மாவட்ட நிர்வாகிகள் செல்வராஜ், அஜாய்கோஷ் கலந்து கொண்டனர்.ஒன்றிய தலைவர் பழனிசாமி நன்றி கூறினார்.
