/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பச்சைக் கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு.. வழங்கப்படுமா நடவடிக்கைக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

ADDED : மார் 11, 2026 05:29 AM

திண்டுக்கல் : சதை பிடிப்பிலுள்ள கன்னிமாநுாத்து பச்சைக் கத்திரிக்காய் சாகுபடி பரப்பை அதிகரிப்பதுடன் அரசு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என சாகுபடி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, கொட்டப்பட்டி, அய்யலுார்,கன்னிமாநுாத்து உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடியாகும் பச்சைக் கத்திரிக்காய் பயன்பாடு சிறப்பு பெற்றதாகும். இப்பகுதியில் அமைந்துள்ள மண்வளம் பச்சைக்கத்திரிக்காய் விளைய உகந்த சூழலாக விளங்குவதால் இவ்வகை கத்திரிக்காய் நோய்தாக்குதல் இன்றி விளைகிறது. அதிகளவில் விற்பனை ஆவதால் விவசாயிகள் அதிகளவில் பயிரிடுகின்றனர். இதற்கு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரித்தால் விளைநில பரப்பளவு , ஏற்றுமதி, விற்பனை வாய்ப்பும் பரவலாக்கப்படும் என விவசாயிகள்வலியுறுத்தி உள்ளனர்.
மாவட்ட வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் உமா கூறியதாவது: ஆண்டுதோறும் ஏப்ரல் துவக்கத்தில் புவிசார்குறியீட்டுக்கான விபரங்கள் பரிந்துரைக்க அரசால் அறிவுறுத்தல் பெறப்படும். குறிப்பாக ரெட்டியார்சத்திரம் அருகில் உள்ளகன்னிமாநுாத்து பச்சை கத்திரி, வடமதுரை, அதன் அருகிலுள்ள அய்யலுார், கொட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சதைபிடிப்பான அதிக சுவைதரும் பச்சைக்கத்திரிக்காய்க்கு இந்தாண்டு ஏப்ரலில் பரிந்துரை வழங்க சாகுபடியில் ஈடுபட்டுள்ள10 முதல் 15 விவசாயிகள் இணைந்து பரிந்துரை கடிதம் தயாரித்து வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர்அலுவலகத்தில் சமர்பித்தால் சாத்தியக் கூறுகள் ஆராய்ந்து ஆய்வு செய்த அறிக்கை தயாரித்து புவிசார்குறியீடு பெற அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றார்.