ADDED : அக் 29, 2025 09:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: அரசு இடங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் மனை பட்டா வழங்கிட வேண்டும், நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டாமல் நீர் பிடிப்பு இல்லாத இடம் குடியிருப்போர் அனைவருக்கும் வகை மாற்றம் செய்து மனைப்பட்டா வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இதற்கு அ.இ.வி..தொ.சங்க அகில இந்திய துணத்தலைவர் லாசர், விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பெருமாள் தலைமை வகித்தனர்.
மாவட்ட நிர்வாகிகள் ராமசாமி, பெருமாள் கலந்து கொண்டனர்.

