ADDED : டிச 13, 2025 05:50 AM
அ நிறம் | அளவு
பழநி: பழநி கலிக்கநாயக்கன்பட்டி குளம், குறும்பபட்டி குளம், தட்டான் குளத்திலிருந்து விவசாயம், கால்நடைகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த குளத்தின் மூலம் கலிக்க நாயக்கன்பட்டி, கே.ஜி.வலசு பகுதிகளுக்கு பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.
இந்த குளத்திற்கு வரதமாநதி அணை இருந்து தண்ணீர் வரத்து உள்ளது. ஆனால் அதிகாரிகள் பாரபட்சமாக சில குளங்களுக்கு மட்டும் தண்ணீர் வினியோகம் செய்து வருவதாகவும் கலிக்கநாயக்கன்பட்டி, குரும்ப பட்டி, தட்டான் குளத்திற்கு தண்ணீர் வழங்கவில்லை எனக் கூறி பழநி நீர்வளத்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சு வார்த்தை பின் கலைந்து சென்றனர்.
