தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/விவசாயிகள் மறியல்

விவசாயிகள் மறியல்

விவசாயிகள் மறியல்


UPDATED : அக் 13, 2026 09:25 PM

ADDED : அக் 13, 2026 09:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 09:25 PM ADDED : அக் 13, 2026 09:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆயக்குடி: பழநி அருகே ஆயக்குடியில் மாப்பிள்ளைநாயக்கன் குளத்தில் இருந்து கோம்பைபட்டி செல்லும் ரோட்டில் தனிநபர்கள் தென்னை மரங்களை நட்டு பாதையை மறித்துள்ளனர். எனவே நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும் வருவாய் துறையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்பேரில் நேற்று அளவீடு செய்ததை தனிநபர்கள் தடுத்ததால் தமிழ்நாடு விவசாய சங்க மாநிலக் குழு உறுப்பினர் கமலக்கண்ணன் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் திண்டுக்கல் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆயக்குடி போலீசார் சமரசம் செய்தனர். தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் நில அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us