நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை : நிலக்கோட்டையில் டி.என்.டி .,ஒற்றை சான்றிதழ் வழங்க வலியுறுத்தி சீர்மரபினர் பொதுமக்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூக கூட்டமைப்பு சார்பில் நிலக்கோட்டை நால்ரோட்டில் நடந்த இதற்கு பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமை வகித்தார். சட்டசபை தேர்தலுக்குள் வழங்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனர்.

