/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அச்சம்... ஆபத்து... அவதி கொடைக்கானல் 10வது வார்டில் தொடரும் அவலம்
/
அச்சம்... ஆபத்து... அவதி கொடைக்கானல் 10வது வார்டில் தொடரும் அவலம்
அச்சம்... ஆபத்து... அவதி கொடைக்கானல் 10வது வார்டில் தொடரும் அவலம்
அச்சம்... ஆபத்து... அவதி கொடைக்கானல் 10வது வார்டில் தொடரும் அவலம்
ADDED : ஜூலை 11, 2025 03:23 AM

கொடைக்கானல்:குரங்குகள், காட்டுமாடுகளால் அச்சம் , ஆபத்தான மரங்களால் ஆபத்து ,திறந்தவெளியால் அவதி என கொடைக்கானல் நகராட்சி 10 வது வார்டு மக்கள் பரிதவிக்கின்றனர்.
பெய்ரி பால்ஸ், வட்டக்கானல், டால்பின் நோஸ், திருவள்ளுவர்நகர் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த வார்டில் வட்டக்கானல் அருவி, டால்பின் நோஸ், கால்ப் மைதானம், பசுமை பள்ளதாக்கு உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளது. வார்டில் சரிவர அள்ளப்படாத குப்பையால் நோய் தொற்று ,ஆபத்தான மரங்களால் விபத்து அபாயமும் உள்ளது. பார்க்கிங் வசதி இல்லாத நிலையில் கண்ட இவங்களில் வாகனங்களை நிறுத்தும் நிலை தொடர்கிறது .சுகாதார வளாகங்களின்றி ரோட்டோரத்தை பயன்படுத்தும் அவலமும் உள்ளது. காட்டுமாடு, குரங்கு, தெருநாய்களால் குடியிருப்புவாசிகள் அவதியடைகின்றனர் .சேதமடைந்த குறுக்கு ரோடுகள், அடிக்கடி மின்தடை என ஏராளமான பிரச்னைகள் வார்டில் உள்ளன.
திறந்த வெளியால் தொற்று
தில்லைநாதன்,டிரைவர் : வார்டில் சரி வர அள்ளப்படாத குப்பையால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. குரங்குகள் தொல்லையால் குடியிருப்புகளில் பொருட்கள் சேதமடைகின்றன. டால்பின் நோஸ் பகுதியில் கழிப்பறை வசதியின்றி இருபாலரும் ரோட்டோரத்தை பயன்படுத்தும் அவலம் உள்ளது.திருவள்ளுவர் நகர் வட்டக் கானல் பகுதியில் குடிநீர் பைப் லைன் அமைக்கப்படாமல் பழைய நிலை தொடர்கிறது. பாம்பார் புரத்தில் உள்ள ரேஷன் கடை 5 கி.மீ ., துாரத்தில் உள்ளதால் வட்டக்கானலில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
ரோடுகள் சேதம்
மேனன்,இயற்கை அலுவலர் : வட்டக்கானல் சுற்றுலா பகுதியில் பார்க்கிங் வசதியின்றி அவதிப்படும் நிலை உள்ளது. தற்போது கட்டமைக்கப்படும் சுகாதார வளாகத்தை துரிதப்படுத்த வேண்டும். திருவள்ளுவர் நகர் குறுக்கு படிக்கட்டு, ரோடுகள் சேதம் அடைந்துள்ளன. வட்டக்கானல் படிப்பாதைகளையும் சீரமைக்க வேண்டும். பசுமை பள்ளத்தாக்கு வட்டகானல் இடையே உள்ள குறுக்கு பாதை ஆக்கிரமிப்பால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
குரங்குகளை விரட்ட நடவடிக்கை
முகமது இப்ராஹிம், கவுன்சிலர், (தி.மு.க.,) : ரூ. 7 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன. வட்டக்கானலில் இருந்து வெள்ளகெவிக்கு ரோடு அமைக்க முதற்கட்டமாக ரூ. 22.50 கோடி மதிப்பீட்டில் ரோடு அமைக்கப்படுகிறது.
எஞ்சிய ரோட்டிற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை வனத்துறையினர் பிடித்து பேரிஜம் பகுதியில் விடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடிக்கடி ஏற்படும் மின்தடையை சீரமைக்க புதிய டிரான்ஸ்பர் அமைக்க கோரப்பட்டுள்ளது. பாம்பார்புரத்திலிருந்து வட்டக்கானல் வரை குடிநீர் பைப் லைன் அமைக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்தும் மரங்களை அகற்ற தனியார் தோட்டத்தினரிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. வட்டக் கானல் பகுதியில் மகளிர் குழு கட்டடத்தில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.