/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழனி கிரிவீதியில் நார் விரிப்புகள்
/
பழனி கிரிவீதியில் நார் விரிப்புகள்
ADDED : மார் 15, 2024 01:31 AM

பழனி:திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் வெளிப்பிரகாரம் மற்றும் கிரி வீதியில் நடந்து செல்லும் பக்தர்களை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க நார் விரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
பங்குனி உத்தர திருவிழா நடக்கவுள்ளதை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் பழனி கோவிலுக்கு வருகின்றனர்.
கோவில் வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனத்துக்கு செல்ல வசதியாக, கிரிவீதியில், விஞ்ச் ஸ்டேஷன் முதல், பாத விநாயகர் கோவில், குடமுழுக்கு மண்டபம் வரை நார் விரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது நார் விரிப்புகளில் தண்ணீர் தெளித்து, குளுமையாக வைக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெயிலின் தாக்கம் குறையும் வரை விரிப்புகள் அமைக்கப்பட்டிருக்கும். ரோப்கார் ஸ்டேஷன் அருகிலும் இதுபோல விரிப்புகள் அமைக்கப்படவுள்ளன.

