ADDED : ஆக 21, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் தெற்கு ரதவீதி பஜனை மடம் அருகில் ஒன்டிவீரன் நினைவுதினம், மதன்லால் திங்ரா நினைவுதினம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம், மகான் அரவிந்தர் பிறந்த தினம், காந்திய கிராமிய பல்கலைக்கழக நிறுவனர் சவுந்தரம் ராமச்சந்திரன் பிறந்தநாள் என ஐம்பெரும் விழா கடைபிடிக்கப்பட்டது.
மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் அருணகிரி முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் பேசினார். எழுமலை, வைரவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.