/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மருத்துவ கழிவுகளை கொட்டினால் அபராதம்
/
மருத்துவ கழிவுகளை கொட்டினால் அபராதம்
ADDED : டிச 02, 2025 07:20 AM
ஒட்டன்சத்திரம்: பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் மருத்துவக் கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என ஒட்டன்சத்திரம் நகராட்சி கமிஷன் சுவேதா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதி அரசு, தனியார் மருத்துவமனைகள், கால்நடை மருத்துவமனை, ஆய்வகங்கள், ரத்தப் பரிசோதனை நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் ரத்தக்கறை படிந்த துணிகள், ஊசிகள், காலாவதி மருந்துகளை முறையாக தரம் பிரித்து மருத்துவமனை கழிவுகளை மேலாண்மை செய்யும் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் கொட்டினால் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என்றார்.

