/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சந்தனகட்டை கடத்தியோருக்கு அபராதம்
/
சந்தனகட்டை கடத்தியோருக்கு அபராதம்
ADDED : ஆக 05, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: செந்துறை பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது நயினாகவுண்டன்பட்டி தனியார் தோட்டத்தில் நின்றிருந்த 2 பேர் டூவீலரை விட்டு விட்டு தப்பினர். டூவீலரை ஆய்வு செய்ததில் சாக்கு மூடையில் 20 கிலோ சந்தன மரக்கட்டைகள் இருந்தது. அய்யலுார் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வனச்சரக அலுவலர் முருகேசன் நடத்திய விசாரணையில் சந்தன கட்டைகளை கடத்தியது பிள்ளையார் நத்தம் வெள்ளையன்53, அடைக்கன் 55, என்பது தெரிந்தது.
இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் என ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.