UPDATED : ஜூலை 07, 2026 05:33 PM
ADDED : ஜூலை 07, 2026 05:31 PM

அ நிறம் | அளவு
நெய்க்காரப்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்தவர் கார்த்திக் 33. இவர் நெய்க்காரப்பட்டி அருகே கரடிக்கூட்டம் தாதநாயக்கன்பட்டி ரோட்டில் தேங்காய் மட்டையில் இருந்து நார் பிரிக்கும் மில் வைத்துள்ளார்.
நேற்று மதியம் இவரது மில்லில் குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நார் கழிவுகளில் திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்த பழநி தீயணைப்பு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான வீரர்கள் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சென்று தீயை அணைத்தனர்.
