ADDED : ஜூலை 08, 2026 03:26 AM

நெய்க்காரப்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்தவர் கார்த்திக் 33. இவர் நெய்க்காரப்பட்டி அருகே கரடிக்கூட்டம் தாதநாயக்கன்பட்டி ரோட்டில் தேங்காய் மட்டையில் இருந்து நார் பிரிக்கும் மில் வைத்துள்ளார்.
நேற்று மதியம் இவரது மில்லில் குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நார் கழிவுகளில் திடீரென தீப்பிடித்தது.
தகவலறிந்த பழநி தீயணைப்பு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான வீரர்கள் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சென்று தீயை அணைத்தனர்.
கோடவுனில் தீ விபத்து நத்தம்: -மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மண்பானை தொழிலாளி முருகன் 55. இவர் எம்.ஜி.ஆர்., நகர் வீட்டின் அருகே பானைகளை பாதுகாக்க அமைத்துள்ள கூரை கோடவுனில் தீப்பற்றியது.
தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் அங்கிருந்த பானைகள், தளவாட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
