ADDED : ஜூலை 01, 2026 01:05 AM

அ நிறம் | அளவு
பழநி: பழநி நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயால் நகர் முழுவதும் புகைமண்டலமாக மாறி பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
பழநி நகராட்சி குப்பை கிடங்கில் தினமும் டன் கணக்கில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் நேற்று திடீரென தீப்பற்றியது. பின்னர் புகை மண்டலமாக மாறி காற்றின் வேகம் காரணமாக அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் பரவியது.
தொடர்ந்து காய்கனி கமிஷன் மண்டி மார்க்கெட், சத்யா நகர், ரயில் நிலையம், பாண்டியன் நகர், புது நகர், தட்டான்குளம் பகுதிகளில் புகை பரவியது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மூச்சுத்திணறலால் அவதிப் பட்டனர்.
நகராட்சி குப்பை கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் அவதிப்படுவது தொடர்கிறது. இதற்கு நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
